/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகம்
/
காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 11, 2025 11:27 PM

காட்டுமன்னார்கோவில்: லால்பேட்டையில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை காசி விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி 9ம் தேதி காலை யாத்ரா தானம், முதல்கால யாக பூஜைகள் நடந்தது. 10ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜைகள், கருவறையில் தீப ஸ்தாபனம் , பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது.
நேற்று காலை நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். பின், விமான கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை சிவ கிருஷ்ணர் கோவில் தலைமை அர்ச்சகர் நாகராஜன் சிவாச்சாரியார், சுரேஷ் சிவாச்சாரியார் செய்திருந்தனர்.

