ADDED : அக் 29, 2024 06:52 AM

கிள்ளை: கிள்ளையில், மா.கம்யூ., கட்சியின் தெற்கு ஒன்றிய மாநாடு நடந்தது.
ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி துவக்கி வைத்தார். திருஞானம் வரவேற்றார். மாநாட்டு கொடியை, ஜீவா ஏற்றி வைத்தார்.
தீர்மானங்களை, ஒன்றியக்குழு உறுப்பினர் சுதாகர் வாசித்தார். வேலை அறிக்கையை, ஒன்றிய செயலாளர் ஆழ்வார், வரவு செலவு அறிக்கையை, சுனில் சமர்பித்தனர்.
மாநாட்டில், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் பேசினர்.
மாநாட்டில், வடக்கு பிச்சாவரம் - கிள்ளை இடையே இணைப்பு பாலம் கட்ட வேண்டும், கொடிப்பள்ளம் கிராம மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், தெற்கு பிச்சாவரம் உப்பனாற்றில் புதிய பாலம் கட்ட வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் மாவட்டக்குழு கற்பனைச்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முத்துகுமாரசாமி, கலைமணி, ராஜபிரியா, திருஞானம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.