தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளியில் மழலையர் வகுப்பு துவக்கம்

 பள்ளியில் மழலையர் வகுப்பு துவக்கம்

 பள்ளியில் மழலையர் வகுப்பு துவக்கம்


ADDED : ஜூன் 12, 2026 08:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 08:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அருணாச்சலா மேல்நிலைப்பள்ளியில், மழலையர் வகுப்பு துவக்க விழா, பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

செயலாளர் சட்டநாதன், நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் வேலு, கார்த்திகேயன், செல்வராசு, திராவிட அரசு, குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், எதிர்காலம் பற்றி செயலாளர் மற்றும், நிர்வாக இயக்குனர் விளக்கி பேசினர்.

பெற்றோர் மற்றும் மழலையர்களை மகிழ்விக்க உயர் வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர் திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் ஆண்டுகளின் பெயர்களை ஒப்புவித்தல் மற்றும், அப்துல் கலாம் பற்றி பேசி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மழலையர்களுக்கு எழுது பொருட்கள், இனிப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட் டது. முதல்வர் ஜோதிலிங்கம், பெற்றோர் ஆற்ற வேண்டிய கடமை பற்றியும், மாணவர் வளர்ப்பு குறித்தும் விரிவாக பேசினார்.

விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர், அபிராமி, எழிலரசி, பானு உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னதாக சுவேதா வரவேற்றார்; பள்ளி ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார்.

ஆசிரியர் மோனிஷா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us