/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிசான் திட்ட நிகழ்ச்சி விவசாயிகளுக்கு அழைப்பு
/
கிசான் திட்ட நிகழ்ச்சி விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 02, 2025 07:04 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று நடக்கும் பிரதமர் கிசான் திட்ட நிகழ்ச்சியில், விவசாயிகள் பங்கேற்க வேண்டுமென, திட்ட ஒருங்கிணைப்பாள் நடராஜன் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பிரதமர் கிசான் சம்மன் நிதி 20வது தவணை செலுத்தும் நிகழ்ச்சி, இன்று (2ம் தேதி) காணொலியில் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றி, விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும் பிரதம மந்திரியின் 20வது கிசான் சம்மன் நிதியின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒளிபரப்பப்படும் காணொலி காட்சியில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.