/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 70 சதவீதம் நிறைவு: கலெக்டர் தகவல்
/
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 70 சதவீதம் நிறைவு: கலெக்டர் தகவல்
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 70 சதவீதம் நிறைவு: கலெக்டர் தகவல்
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் 70 சதவீதம் நிறைவு: கலெக்டர் தகவல்
ADDED : ஏப் 05, 2025 05:32 AM

சிதம்பரம்; சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை நகர் பகுதியில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
சிதம்பரம் நகராட்சி மற்றும் அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் நடக்கும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சுற்றுலா துறை கட்டுமான பணிகள், கான்சாகிப் வாய்க்கால் தடுப்புச்சுவர், கனகசபை நகர் நகராட்சி துவக்கப்பள்ளி, மானாசந்து மற்றும் சம்பந்தகாரதெரு அங்கன்வாடி மையங்கள், கனகசபை நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் வடக்கு வீதி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறுகையில், 'நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊராட்சிகளுக்கு குடி நீர் வழங்கும் வகையில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் ரூ.255.64 கோடி மதிப்பில் நடக்கிறது. தற்போது 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் சுற்றுலா ஓய்வு இல்லம், சுற்றுலா விளக்க மையக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 24 தங்கும் அறைகள், கலையரங்கக் கூடம், உணவருந்தும் கூடம், வாகன நிறுத்தம் போன்ற பணிகள் ரூ.8.65 கோடி, கூடுதில் நிதி ஒடுக்கீடு செய்து பணிகள் விரைவாக நடந்து வருகிறது' என்றார். நகராட்சி கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமார்ராஜ் உடனிருந்தனர்.