/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை அமைக்கக்கோரி கோட்டேரி கிராம மக்கள் மனு
/
ரேஷன் கடை அமைக்கக்கோரி கோட்டேரி கிராம மக்கள் மனு
ADDED : டிச 27, 2024 11:01 PM

கடலுார்: ரேஷன் கடை அமைக்கக்கோரி ரேஷன் கார்டுகளுடன் பொதுமக்கள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
கோட்டேரி கிராமத்தில் 140க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் கார்டுகள் பயன்படுத்தி  வருகின்றோம். எங்கள் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால் 2 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் எங்கள்  கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ரேஷன் கடை அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

