தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிருஷ்ண ஜெயந்தி  உறியடி உற்சவம்

கிருஷ்ண ஜெயந்தி  உறியடி உற்சவம்

கிருஷ்ண ஜெயந்தி  உறியடி உற்சவம்


ADDED : செப் 06, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம் நடந்தது.

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில், பெருமாள், செங்கமலத்தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

இரவு 8:00 மணியளவில், கோவில் வளாகத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் பங்கேற்ற உறியடி உற்சவம் நடந்தது. இதேபோல,  சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பெருமாள், தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும், பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கு இனிப்பு, பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், கம்பர் தெருவில் உள்ள ராதாகிருஷ்ணர் பஜனை மடத்தில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us