/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் கிரிவலம்; சிவனடியார்கள் தகவல்
/
விருத்தாசலத்தில் கிரிவலம்; சிவனடியார்கள் தகவல்
ADDED : அக் 14, 2024 11:19 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தை சுற்றியுள்ள அஷ்ட லிங்கத்தை சுற்றி பவுர்ணமி கிரிவலம் வர உள்ளதாக சிவனடியார்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், உலக சிவனடியார் திருக்கூட்டம், மகான் கோரக்கர் சித்தர் அறக்கட்டளை, மதுரை ஆளவாயார் அருட்பணி மன்ற அடியார்கள், உலக சிவனடியார் கூட்ட சிவனடியார்கள் இணைந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றி திருவண்ணாமலை போல அஷ்ட லிங்கம் உள்ளது.
பூதாமூரில் இந்திர லிங்கம், ஏனாதிமேடு அக்னி லிங்கம், ஏகநாயகர் கோவில் எம லிங்கம், ஆலிச்சிகுடியில் நிருதி லிங்கம், மணவாளநல்லுாரில் வருண லிங்கம், எருமனுாரில் வாயு லிங்கம், வயலுாரில் குபேர லிங்கம், குப்பநத்தம் கிராமத்தில் ஈசான லிங்கம் ஆகிய அஷ்ட லிங்கங்கள் உள்ளன.
எனவே, திருவண்ணாமலை போல, பவுர்ணமி நாளில் சிவனடியார்கள், அடியார்கள் இணைந்து கிரிவலம் வர உள்ளோம் என்றனர்.
உலக சிவனடியார் கூட்டம் பொருளாளர் ராஜாராம், அகில உலக சிவனடியார் திருக்கூட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.