
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: அகில இந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும், பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
கடலுாரில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் அபினேஷ் கலந்து கொண்டு, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். இவர், வரும் 28 ம் தேதி விஜயவாடாவில் நடக்கும் அகில இந்திய அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளார்.
இம்மாணவருக்கு பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகா தலைமையில் பாராட்டு விழா நடந்தது.பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் மாணவரை பாராட்டினர்.