
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், - தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற கடலுார் அடுத்த கலையூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், ஊராட்சி தலைவர் நிரஞ்சனி ஆகியோர் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் வெற்றி பெற்ற எட்டாம் வகுப்பு மாணவி தான்யஸ்ரீயை பாராட்டி பரிசு வழங்கினர்.
அப்போது, ஆசிரியர்கள் ரமேஷ், அமுதலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

