ADDED : மார் 13, 2024 06:48 AM

சிதம்பரம் : கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீனஸ் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டடனர்.
சிதம்பரம் அடுத்துள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் நடந்த மாநில கராத்தே போட்டியில் சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளி மாணவ, மாணவியர் 4 பேர் முதல் பரிசும், 8 பேர் இரண்டாம் பரிசும், 7 பேர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.
மேலும், சிதம்பரம் ஷெம்போர்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளிலும் வீனஸ் குழும பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 60 பேர் கலந்துகொண்டு மஞ்சள், பச்சை பெல்ட் வென்றனர்.
அதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற வீனஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
வீனஸ் கல்விக் குழும நிறுவனர் குமார், பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி, தலைமைக் கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன், நிர்வாக அலு வலர் ரூபி கிரேஸ் போனிகலா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சியாளர் குமரகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

