/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
/
கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : பிப் 23, 2024 12:19 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் எஸ்.பி., அலுவலகம் அருகே அமைந்துள்ள கமலவல்லி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
பூஜைகள் கடந்த 20ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ணாஹூதி,மாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, சயனாவதி வாசம்நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு கோ பூஜை, 8:00மணியளவில் ஐந்தாம் கால யாக சாலை பூஜை, சாந்தி ஹோமம், மகாபூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது.
பின்னர் கும்பம் வீதி புறப்பாடு, காலை11:00 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.
ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.