ADDED : ஆக 08, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே ஓங்கார ஆசிரமம் மகா கைலாயத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார், ஆணையாங்குப்பம் ஓங்கார ஆசிரமம் மகா கைலாயத்தில் உள்ள ஞானேஸ்வரி மகா பிரபு கோவிலில் கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முன்தினம், முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, கடங்கள் புறப்பாடாகி கும்பாபிஷேகம் நடந்தது.
சுவாமி ஓங்காரநந்தா, நிர்வாகிகள் கோடீஸ்வரானந்தா, விஜயராகவன், ராமகிருஷ்ணன், குருமூர்த்தி, கல்யாணி, பத்மேஸ்வரி, உலகேஸ்வரி, நீதிகுமார், கருணாகரன், ராம்குமார், சீனு ராமதாஸ் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.