sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

/

திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


ADDED : ஆக 29, 2025 03:05 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

இதனை முன்னிட்டு 25ம் தேதி மாலை அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குராப்பணம், பாலிகை பூஜை நடந்தது. 26ம் தேதி காலை கும்ப கலச தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து முதல் கால ஹோமம் நடந்தது. மாலை அஷ்டபந்தனம் சாற்றுதல், இரண்டாம் கா ல ஹோமம் நடந்தது. 27ம் தேதி காலை த்வார பூஜை, விமான கோபுரங்கள் திருமஞ்சனம், மூன்றாம் கால ஹோமம் நடந்தது. மாலை உற்சவர் 81 கலச திருமஞ்சனம், நான்காம் கால ஹோமம் நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஐந்தாம் கால யாகசாலை, பூர்ணாஹூதி சாற்றுமுறை நடந்தது. தொடர்ந்து தச தானம், யாத்ரா தானம், மஹா கும்பங்கள், உத்ஸவர் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு மூலவர் விமானங்கள் மற்றும் தோரணவாயிலில் புனிதநீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கடலுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர். விழாவில் கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் ஜி.ஆர்.கே.,குழுமத்தலைவர் துரைராஜ், அ.தி.மு.க., மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, மாநில ஜெ., பேரவை துணைசெயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் முருகன், காங்.,மாநகர தலைவர் வேலுசாமி, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுசாமி, ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.,முரளிதரன் மற்றும் வள்ளிவிலாஸ் குழுமத்தினர், டி.வி.ஆர்.,கல்விக்குழும தாளாளர் ரங்கமணி, ஸ்ரீவள்ளிவிலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகத்தினர், லட்சுமி சோர்டியா பள்ளி நிர்வாகத்தினர், எலைட் கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், சூர்யா பில்டர்ஸ் வெங்கடாசலம், விஜயசங்கர், கற்பகவிலாஸ் பாத்திரக்கடை ரமேஷ், புகழ் பிரிண்டர்ஸ் புகழேந் தி, ராஜ் ஸ்டிக்கர்ஸ், முருகன் ரியல் எஸ்டேட், பார்வதி ஆயில் மில்ஸ், ஓம் பாலாஜி ஸ்டோர்ஸ், மீனா டிரேடர்ஸ், எஸ்.கே.பி.,காய்கறி கடை, தங்கம் ஸ்டீல் கம்பெனி உரிமையாளர்கள், ஜெய்மகாவீர் ஜூவல்லரி உரிமையாளர் பிரதீப்குமார், என்.எஸ்.,மகாவீர் ஷீவல்லரி, சந்திரா மகளிர் தையலகம் தாமோதரன், கோவிந்தசாமி-வச்சலாதேவி குடும்பத்தினர் உட்பட பலர் விழாவில் பங்கேற்று சுவாமி தரிச னம் செய்தனர்.






      Dinamalar
      Follow us