/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் கோவிலில் 11ம் தேதி கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவிலில் 11ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : செப் 09, 2025 07:47 AM
புவனகிரி; புவனகிரி கச்சேரி விநாயகர் மற்றும் ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது.
புவனகிரி கச்சேரி விநாயகர் கோவில் தெருவில் உள்ள விநாயகர் மற்றும் ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (9ம் தேதி) காலை கணபதி ஹோமம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது.
நாளை 10ம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.
11ம் தேதி காலை 6:30 மணிக்கு நான்காம் யாக சாலை பூஜை, இசை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, 9:00 மணிக்கு மகாபூர்ணாஹூதி, மகா தீபராதனையும், 10:00 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் விமானத்தில் புனித நீர் கும்பாபிஷேகம் நடக்கிறது.