/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்து மாரியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
/
முத்து மாரியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
முத்து மாரியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
முத்து மாரியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 09, 2025 08:12 AM
கடலுார் : கடலுார், வன்னியர்பாளையம் முத்து மாரியம்மன் கோவிலில், வரும் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கடலுார் வன்னியர்பாளையம் வினைதீர்த்த விநாயகர், முத்து மாரியம்மன், பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 11ம் தேதி காலை லட்சுமி பூஜை, கோ பூஜை, தன பூஜை, 12ம் தேதி காலை வாஸ்து சாந்தி பூஜை, நவகிரக பூஜை ஹோமங்கள், இரவு மிருத்ஹங்கிரஹணம், சோம கலச பூஜை, யாகசாலை பிரவேசம் நடக்கிறது.
13ம் தேதி காலை பாலிகை பூஜை, சூர்ய பூஜை த்வார பூஜை, வேதிகார்ச்சனையும், மாலை வேதபாராயணம், லலிதா சஹஸ்ர நாம ஹோமம் நடக்கிறது. 14ம் தேதி காலை 9:15மணிக்கு வினை தீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், 9.45மணிக்கு பூரணி பொற்கலை உடனுறை அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் விமானத்திற்கும், 10.15மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. 15ம் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடக்கிறது.

