/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூத்தாண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
கூத்தாண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : டிச 15, 2024 07:43 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் அரவாணிகள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அரவாணிகள் திருவிழா நடத்தப்படவில்லை. அதைதொடர்ந்து, கோவில் சேதமடைந்ததால், 5 ஆண்டுகளாக அரவாணிகள் திருவிழா நடத்தப்படவில்லை.
இந்நிலையில் கோவில் புதுப்பிக்கப்பட்டு இன்று (15ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, 13ம் தேதிபூஜைகள் துவங்கியது. நேற்று, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று மூன்றாம் காலயாக பூஜையும், காலை 9;00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9;30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை, அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.