/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செல்லியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
செல்லியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : செப் 04, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : ஆண்டார்முள்ளிப்பள்ளம் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று காலை 9.00 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கரணம் நடந்தது. இரவு 8.00 மணிக்கு ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, 9.30 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
இன்று (4 ம் தேதி) காலை 6.30 மணிக்கு சங்கல்பம், புண்ணியா வாகனம், கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9.00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9.30 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.

