
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; தேவனாம்பட்டினம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடலுார் தேவனாம்பட்டினம், திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன் உடனிருந்தனர்.