/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆபத்தாரணபுரத்தில் கோவில் கும்பாபி ேஷகம்
/
ஆபத்தாரணபுரத்தில் கோவில் கும்பாபி ேஷகம்
ADDED : பிப் 13, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வடலுார், ஆபத்தாரணபுரம் தேவி நாககன்னி அம்மன் கோவில் கும்பாபி ேஷக விழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வடலுார், ஆபத்தாரணபுரம் தேவி நாககன்னி அம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தையொட்டி கடந்த 9ம் தேதி அனுக்ஞை, மகா கணபதி ேஹாமம் நடந்தது. 10ம் தேதி கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முளைப்பாரி ஊர்வலம், முதல் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது.
நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக சாலை பூஜை, கடம் புறப்பாடாகி கும்பாபி ேஷகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். மண்டலாபி ேஷக பூஜைகள் நேற்று துவங்கியது.