/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருவருக்கு குண்டாஸ்; கடலுார் கலெக்டர் அதிரடி
/
இருவருக்கு குண்டாஸ்; கடலுார் கலெக்டர் அதிரடி
ADDED : நவ 16, 2024 05:25 AM

கடலுார் : போக்சோ வழக்கில் கைதானவர் மற்றும் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடலுார் அடுத்த ராசாப்பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல்,44; இவர், 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக, கடலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்,39; ரவுடியான இவர், கடந்த 23ம் தேதி, நெய்வேலி அடுத்த மேலக்குப்பத்தைச் சேர்ந்த மூதாட்டி கமலத்திடம், பணம் கேட்டு கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் நெய்வேலி தெர்மல் போலீசார், பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர்களின் தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., பரிந்துரையை ஏற்று, சக்திவேல், பிரகாஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகல்களை கடலுார் மத்திய சிறையில் உள்ள சக்திவேல் மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் போலீசார் நேற்று வழங்கினர்.

