தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இளம்பெண் பலாத்காரம் : வாலிபருக்கு 'குண்டாஸ்'

இளம்பெண் பலாத்காரம் : வாலிபருக்கு 'குண்டாஸ்'

இளம்பெண் பலாத்காரம் : வாலிபருக்கு 'குண்டாஸ்'


ADDED : பிப் 20, 2025 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: விருத்தாசலத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்குமரன் மகன் வெங்கடேசன்,24. இவர் தன்னுடன் படித்த கல்லுாரி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலாத்காரம் செய்தார்.

கடந்த டிசம்பர் மாதம், மாணவி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்.

இவரின் குற்றச்செயலை தடுக்கும்பொருட்டு எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடலுார் மத்திய சிறையில் உள்ள வெங்கடேசனிடம், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us