/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குஷ்பு உருவப்பொம்மை எரிப்பு கடலுாரில் தி.மு.க., போராட்டம்
/
குஷ்பு உருவப்பொம்மை எரிப்பு கடலுாரில் தி.மு.க., போராட்டம்
குஷ்பு உருவப்பொம்மை எரிப்பு கடலுாரில் தி.மு.க., போராட்டம்
குஷ்பு உருவப்பொம்மை எரிப்பு கடலுாரில் தி.மு.க., போராட்டம்
ADDED : மார் 15, 2024 11:56 PM

கடலுார்: கடலுாரில் தி.மு.க., மகளிரணியினர் பா.ஜ.,வை சேர்ந்த நடிகை குஷ்பு உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுாரில் மாநகர தி.மு.க., மற்றும் கிழக்கு மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் மகளிர் உரிமை தொகையை விமர்சித்து பேசிய பா.ஜ., தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்புவை கண்டித்து உருவப்பொம்மையை எரிக்கும் போராட்டம் நடந்தது.
கடலுார் பாரதி சாலையில் நடந்த போராட்டத்திற்கு, மகளிரணி அமைப்பாளர் அமுதராணி தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மகளிரணி தலைவி லதா முன்னிலை வகித்தனர்.
இதில், குஷ்புவின் உருவப்பொம்மையை சாலையில் போட்டு தீ வைத்து எரித்து, கண்டன கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து, போலீசார் தீயை அணைத்தனர்.
அப்போது, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், பகுதி துணை செயலாளர் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இச்சம்பவத்தால் பாரதி சாலையில் போக்குவரத்து பாதித்தது.

