/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாரிசுகளுக்கு வேலை தொழிற்சங்கம் மனு
/
வாரிசுகளுக்கு வேலை தொழிற்சங்கம் மனு
ADDED : அக் 05, 2025 03:30 AM

நெய்வேலி : என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு வழங்கிய குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப நிரந்தர வேலை வழங்க வேண்டும் என, மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து நெய்வேலி என்.எல்.சி.,சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளியிடம், பி.எம்.எஸ்.,தொழிற்சங்க தலைவரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச் செயலாளருமான வீரவன்னியராஜா அளித்த மனு:
என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு மற்றும் நிலம் வழங்கிய குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்.எல்.சி.,நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய நிரந்தர தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். என்.எல்.சி., காண்ட்ராக்ட் மற்றும் சொசைட்டி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
ஒப்பந்த மற்றும் இன்கேசர்வ் தொழிலாளருக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். கிராஜிவிட்டி பெற முடியாத தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு லட்ச ரூபாய் சர்வீஸ் அடிப்படையில் வழங்க வேண்டும். என்.எல்.சி., பொது மருத்துவமனையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.