ADDED : செப் 10, 2026 03:01 PM
அ நிறம் | அளவு
கடலுார், செப். 10–
அட்டை பெட்டிக்கு ரூ. 15 வழங்கக்கோரி டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் குடோன் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மதுபான பெட்டிகளை ஏற்றி டாஸ்மாக் கடையில் அட்டி போட்டு அடுக்கும் தொழிலாளர்களுக்கு பெட்டிக்கு ரூ.15 வழங்கிடவும், இஎஸ்.ஐ., பி.எப்., திட்டங்களை அமலாக்கிட வேண்டும், லாரி ஓட்னர்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கிட வலியுறுத்தப்ப்டடது.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் கருப்பையன், சுமைப் பணி மாவட்ட தலைவர் சுப்புராயன் செயலாளர், உத்தராபதி, நிர்வாகிகள் கலிய மூர்த்தி, அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
