மாற்று பயிர் பயிரிடல் முறை குறித்த வெளிவளாக பயிற்சி
மாற்று பயிர் பயிரிடல் முறை குறித்த வெளிவளாக பயிற்சி
ADDED : செப் 10, 2026 03:11 PM
விருத்தாசலம்: குமராட்சி அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில், நெல் மற்றும் பயறு வகை பயிர் சாகுபடிக்கான சிறந்த வேளாண் நடைமுறைகள் மற்றும் மாற்று பயிர் பயிரிடல் முறை குறித்த வெளிவளாக பயிற்சி நடந்தது.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடந்த பயிற்சி முகாமை வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். குமராட்சி வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல் மாற்றுபயிர் பல்வகை படுத்துதல் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
விஞ்ஞானி சத்தியநாரயணன், நெல் மற்றும் பயறுவகை பயிர்களில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், விதை அமிர்தம், உயிர் விதை நேர்த்தி மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.
பயிற்சியில் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, மாற்று பயிர் பயிரிடல், பயிர்களை மதிப்பு கூட்டுதல், மண்வள பாதுகாப்பு, மற்றும் நெல், பயறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், ஆத்மா திட்ட வேளாண் அலுவலர் கல்பனா, வேளாண் அலுவலர்கள் பிரவின், எட்வின் ஆனால்டு, வேளாண் அலுவலர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
