/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏரி துார்வாரும் பணி தாமதம்
/
அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏரி துார்வாரும் பணி தாமதம்
அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏரி துார்வாரும் பணி தாமதம்
அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏரி துார்வாரும் பணி தாமதம்
ADDED : செப் 06, 2025 03:25 AM
நெல்லிக்குப்பம்:மேல்பட்டாம்பாக்கம் ஏரியை துார்வார பொதுப் பணித்துறை அனுமதி கிடைக்காததால் துார்வாரும் பணி தாமதம் ஏற்படுகிறது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு பெண்ணையாற்றில் இருந்து தண்ணீர் வர வரத்து கால்வாய் உள்ளது.
ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும்.ஆனால் பல ஆண்டுகளாக ஏரியை தூர்வாராததால் முட்புதர்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.
தனியார் அறக்கட்டளை சார்பில் ஏரியை துார்வார பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி நடவடிக்கை எடுத்தார். பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஏரியை துார்வார தீர்மானம் நிறைவேற்றினர்.ஆனால் பொதுப் பணித்துறை மூலம் ஏரியை துார்வார அனுமதி கிடைப்பத்தில் தாமதமாகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.