ADDED : செப் 22, 2024 02:12 AM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சியில், கடலுார் மாவட்ட சுற்றுசுழல் மற்றும் நீர் நிலை பாதுகாப்பு இயக்கம் சார்பில், கந்தன்பாளையம் ஏரி புனரமைப்பு பணிகள் துவங்கி முதற்கட்ட நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். தொழிலதிபர் ராஜசேகர், ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி, முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
தொழில் வர்த்தக சங்க செயலாளர் வீரப்பன் வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தாசில்தார் ஆனந்த், தொழிலதிபர் வைரக்கண்ணு பேசினர்.
தொழிலதிபர்கள் சரவணன், அருள், கார்த்திக், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்துாரிசுப்ரமணி, சுபாஷினிசெல்வம், அம்பத்துார் நீர்நிலை பாதுகாப்பு சங்கம் நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.