sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திறமையான மாணவர்களை உருவாக்கும் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளிகள்

/

திறமையான மாணவர்களை உருவாக்கும் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளிகள்

திறமையான மாணவர்களை உருவாக்கும் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளிகள்

திறமையான மாணவர்களை உருவாக்கும் லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளிகள்


ADDED : அக் 11, 2024 06:23 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்., நகரில் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா, கிராமப்புற மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், பணியாற்றுகிறார். பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, துணை முதல்வர் ஃபத்தாகான் ஒருங்கிணைந்து பணியாற்றி பள்ளியை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

மாணவர்களின் வெற்றியை இலக்காக கொண்டு அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவியர் சிறந்த டாக்டர், பொறியாளர், அரசு பணிக்கு ஏற்றவர்களாக உருவாக்குவதே பள்ளியின் நோக்கம். பொத்தேர்வுகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தி, மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அறிவியல் ஆய்வகம், நுாலக வசதிகள் உள்ளன. ரோபோடிக் வகுப்புகள், யோகா, கராத்தே, சிலம்பம் மற்றும் நடனப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பன்னாட்டு கல்வி வழங்கும் லீடு திட்டத்தினுட் இணைந்து கே.ஜி., முதல், 5ம் வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறது. தலைசிறந்த மழலைக் கல்வி வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு விளையாட்டு வழிக் கல்வி நடத்தப்படுகிறது.

கடந்த பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் மாணவி சவுந்தர்யலட்சுமி 600க்கு 594 மதிப்பெண் பெற்று கடலுார் மாநகரில் முதலிடம், மாவட்ட அளவில் 2ம் இடம், மாநில அளவில் 4ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிறுவனத்தின் மற்றொரு அங்கமான ஸ்ரீலட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெருவில் உள்ளது. பள்ளி முதல்வர் அசோக்மல் சோரடியா தலைமையில் இயங்கும் இப்பள்ளி கடந்த பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மாணவர் முரளி 500க்கு 495 மதிப்பெண் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பிடித்தார். மேலும், வேணு பாலாஜி, ரேணு, பார்த்தசாரதி ஆகியோரும் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். இப்பள்ளியில் விஜயதசமி முன்னிட்டு சேர்க்கை நடக்கிறது. மழலை வகுப்பு சேர்க்கை கட்டணம் 15,000 ரூபாய் மட்டுமே. நோட்டு, புத்தகங்கள் இலவசம். கடந்த ஆண்டு முதல் மழலையர்களுக்கு போடார் ஜம்போ கிட்ஸ் பிளஸ் பள்ளி செயல்படுகிறது என பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா கூறினார்.






      Dinamalar
      Follow us