/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் மக்கள் மனித சங்கிலி
/
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் மக்கள் மனித சங்கிலி
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் மக்கள் மனித சங்கிலி
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு லால்புரம் மக்கள் மனித சங்கிலி
ADDED : மார் 27, 2025 04:24 AM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, லால்புரம் ஊராட்சி மக்கள், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சி மற்றும் சி.கொத்தங்குடி, சி.தண்டேஸ்வரநல்லுார், உசுப்பூர், பள்ளிப்படை உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளை, சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, லால்புரம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு பெண்கள், அரசியல் கட்சியினர் ஊராட்சி அலுவலகம் முன்பு, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கையில் கை குழந்தையுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜாகிர்உசேன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லதா ராஜேந்திரன் மற்றும் சாய் பிரகாஷ், சத்தியமூர்த்தி, ராஜேந்திரன், தமிமுன்அன்சாரி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.