ADDED : அக் 24, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: நிலத்தகராறில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் சிவபெருமாள் மகன்கள் செல்வமணி, 48; ராமச்சந்திரன், 40; இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது.
கடந்த 22ம் தேதி செல்வமணி, மனைவி சரண்யா ஆகியோர் தங்களது நிலத்திற்கு சென்று தீவனம் அறுவடை செய்தபோது, அங்கு வந்த ராமச்சந்திரன், மனைவி செல்வி ஆகியோர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஒருவரையொருவர் ஆபாசமாக பேசி, தாக்கிக் கொண்டனர். இருதரப்பு புகார்களின் பேரில், ஐந்து பேர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரன், செல்வமணி, உறவினர் வெங்கடேசன் மகன் சங்கர், 41; ஆகியோரை கைது செய்தனர்.

