/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு அங்காடிகளில் பட்டாசு விற்பனை துவக்கம்
/
கூட்டுறவு அங்காடிகளில் பட்டாசு விற்பனை துவக்கம்
ADDED : அக் 24, 2024 06:37 AM

கடலுார்: கடலுாரில் கூட்டுறவுத்துறை சார்பில், தீபாவளி பட்டாசு விற்பனையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
கடலுார் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடையை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்து, பட்டாசு விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, கடலுார் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் பட்டாசு விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் பொதுமக்களுக்கு தேவையான தரமான பட்டாசுகளை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது என, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைசெல்வன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மேலாண் இயக்குனர் இன்பிரியாஸ் பங்கேற்றனர்.