/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சட்டம், ஒழுங்கு பிரச்னை ஆட்டோவில் பிரசாரம்
/
சட்டம், ஒழுங்கு பிரச்னை ஆட்டோவில் பிரசாரம்
ADDED : ஜன 14, 2025 11:39 PM
கடலுார்,: கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது, சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க போலீசார் ஆட்டோக்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று தைப் பொங்கல், இன்று மாட்டுப் பொங்கல், நாளை 16ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆற்றுதிருவிழா கொண்டாடப்பட உள்ளது. கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை காலாங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் உள்ள பிரச்னைக்குறிய கிராமங்களில் ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் செய்யவும் எஸ்.பி., அறிவுறுத்தினார்.
அதில், பொங்கல் பண்டிகையின்போது குடிபோதையிலோ அல்லது தேவையின்றி சட்டம், ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி வருகின்றனர்.