நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: நெஞ்சு எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் இறந்தார்.
விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் மகன் ஹரிஹரன், 45. வழக்கறிஞர். நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இறந்தார்.
அவரது மனைவி சுஜி, 33, புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.