/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
/
சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சுற்றறிக்கை நகலை எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 16, 2025 05:22 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உயர்நீதிமன்ற சுற்றறிக்கை நகல் எரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவுறுத்தலில்படி, கீழமை நீதிமன்றங்களில் இ -பைலிங் முறையை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய இ-பைலிங் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
அதன்படி, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் உயர்நீதிமன்ற சுற்றறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. வழக்கறிஞர் புஷ்பதேவன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர்கள் அம்பேத்கர், பூமாலை குமாரசாமி, பட்டி முருகன், சங்கரய்யா உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை நகலை வழக்கறிஞர்கள் எரித்தனர். இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் தலைமையிலான போலீசார், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தால், நீதிமன்ற வளாகம் முன் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.

