/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 16, 2025 05:22 AM

கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் அன்னை அன்பு சமூக சேவை அறக்கட்டளையில் முதலாமாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அன்னை அன்பு சமூக சேவை மற்றும் பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை, புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அரிமா சங்கம் சார்பில் நடந்த விழாவில், பிரெஞ்சு சிட்டி அரிமா சங்க தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். 300க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 150 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், குடிசை வீடுகளில் வசிப்போருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நலத்திட்ட உதவி ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் இலக்கியவேந்தன், நிதி அறங்காவலர் விமலா சங்கர் செய்திருந்தனர்.
செயலாளர் ராஜராஜன், பொருளாளர் ஸ்ரீகாந்த் சசிதர், மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வித்யாஸ்ரீ, டாக்டர் பாஸ்கர் வாழ்த்தி பேசினர்.
துணை பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

