/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இ-பைலிங் முறை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
/
இ-பைலிங் முறை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 09, 2025 07:06 AM

விருத்தாசலம்: இ - பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி, விருத்தாசலம் நீதிமன்றம் முன், வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலர் சங்கர் கணேஷ், மூத்த வழக்கறிஞர்கள் சந்திரசேகர், அம்பேத்கர், ரங்கநாதன், விஜயகுமார், பூமாலை குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வழக்கறிஞர்கள் இளையராஜா, ஆனந்தகண்ணன், வீரப்பன், விநாயகம், ஜெய்சங்கர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இ - பை லிங் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள னர்.