ADDED : ஜூன் 22, 2025 01:45 AM

விருத்தாசலம் : வழக்கறிஞர்கள் படுகொலையை கண்டித்து, விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அனைத்து வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், சுதந்திரமான வழக்கறிஞர் பணி செய்ய முடியாத சூழல் உள்ளதால் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு தீர்மானத்தின்படி, நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் குபேரமணி, துணைத் தலைவர் அசோக்குமார், பொருளாளர் செந்தில், வழக்கறிஞர்கள் விஜயகுமார், சிவாஜிசிங், சங்கரய்யா, சவரணன் உட்பட பலர் பங்கேற்றனர்.