ADDED : ஜூலை 29, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அட்வ கேட் அசோசியேஷன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் குபேரமணி, இணைச் செயலாளர் அப்துல்லா, மூத்த வழக்கறி ஞர்கள் விஜயகுமார், காசி விசுவநாதன், சங்கரய்யா, சிவாஜிசிங், வீரப்பன் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான அவமதிப்பு வழக்கை வாபஸ் வாங்கக் கோரி, வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர். வழக்கறிஞர்கள் மாயமணிகண்டன், சரவணன், ஆனந்தகண்ணன், குமரகுரு, ரவிச்சந்திரன், கணேஷ், புஷ்பதேவன், சீனிவாசன், செல்வகுமார், சிவக்குமார், ராகவன், தனராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

