ADDED : செப் 16, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர் திருமார்பன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சந்துரு, சங்கர், அருள்ஜோதி, பத்ம பிரபு முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் ராகவன், செந்தில் கண்டன உரையாற்றினர். வழக்கறிஞர்கள் திருமுருகன், சீனுவாசன், கமல்ராஜ், சீதாராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீதிபதியை அவதுாறாக பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.