ADDED : அக் 11, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : நீதிபதி அவமதிப்பை கண்டித்து, விருத்தாசலம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சரவணன், தனராஜ், மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
அதில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிேஷார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர்கள் வைரமுத்து, சரவணன், ரமேஷ், திருமால், அருண் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.