ADDED : டிச 18, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன் இ- பைலிங் முறையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு பார் அசோசியேஷன் சங்கத் தலைவர் சாவித்திரி செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க செயலாளர் சங்கர் கணேஷ், துணைத் தலைவர் ராஜா, பொருளாளர் சம்பத் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், ஆனந்த கண்ணன், குமரகுரு, ராஜ்மோகன், கலைமணி, இளையராஜா, கருணாநிதி, ஜெய்சங்கர் பங்கேற்றனர்.

