/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒன்றிய துவக்கப்பள்ளியில் கற்றல் அடைவு திறனாய்வு
/
ஒன்றிய துவக்கப்பள்ளியில் கற்றல் அடைவு திறனாய்வு
ADDED : ஏப் 10, 2025 01:37 AM

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த வாண்டியாம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கற்றல் அடைவு திறனாய்வு நிகழ்ச்சி நடந்தது.
குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலர் சாமுண்டீஸ்வரி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகிலா ஆனந்தன், கிராம தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் வாசித்து மற்றும் எழுதி காண்பித்தனர். மேலும் அடிப்படை கணித பாடங்களை போட்டு காண்பித்தனர். இதில் முன்னாள் தலைமை ஆசிரியை ஜெயந்தி, ஆசிரியர்கள் ஹேமபிரியதர்ஷினி, சூர்யா, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் வீரபாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வசந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.