/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எள்ளேரி பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு
/
எள்ளேரி பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு
ADDED : ஏப் 10, 2025 01:37 AM

காட்டுமன்னார்கோயில் : எள்ளேரி சாட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள எள்ளேரி சாட்டைமேடு, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் நுாறு சதவிகிதம் கற்றல் திறனாய்வு நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் அனைவரும், தமிழ், ஆங்கிலம், படித்தல், எழுதுதல் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை செயல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
குமராட்சி வட்டாரக்கல்வி அலுவலர் நடராஜன் பங்கேற்று, மாணவர்கள் வாசிப்பு திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஞ்சுகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதாசிவம், இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர் ராஜப்பிரியா, மகளிர் சுய உதவிக் குழுவினர், பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
பள்ளி, தலைமையாசிரியர் தம்பியாபிள்ளை நன்றி கூறினார்