/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீழ்புளியங்குடி பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு
/
கீழ்புளியங்குடி பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு
ADDED : ஏப் 21, 2025 05:34 AM

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீழ்புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கற்றல் திறன் ஆய்வு நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து மொபைல் ஆப் மூலம் தேர்வு நடத்தினார். இதில் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவது, படிப்பது, வார்த்தைகளை அடையாளம் காணுதல் மற்றும் கணித அடிப்படையான கூட்டல் கழித்தல், பெருக்கல், வகுத்தல் செயல்பாடுகளை நேரில் கேட்டறிந்தார்
தலைமை ஆசிரியர் மெகருன்னிசா, உதவி ஆசிரியர் மகாலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அருள்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பந்தளராணி உட்பட பலர் பங்கேற்றனர்.