UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:26 PM
கடலுார்: தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறத்தி கடலுாரில் இடதுசாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அமர்நாத், கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூ., கிருபானந்தம் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன் சுப்புராயன், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ராஜேஷ் கண்ணன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட பொருளாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் குளோப், சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) மாவட்ட செயலாளர் ராஜசங்கர், மாநில குழு உறுப்பினர் தனவேல் கண்டன உரையாற்றினர்.
ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
