UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 04:56 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம்: பெண்ணாடம் தேர்வுநிலை பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர்கள் முருகன், இளமதி, துப்புரவு மேற்பார்வையாளர் ராஜ்குமார், துாய்மை பணியாளர்கள் உடப்ட பலர் பங்கேற்றனர்.
பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரண்யா தலைமையிலான குழுவினர், துப்புரவு பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கண்பார்வை, முழுஉடல் உள்ளிட்ட பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
