ADDED : அக் 05, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பண்ருட்டியில் வட்ட சட்டபணிகள் குழு, தேசிய மகளிர் ஆணையம் இணைந்து பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார சேவை மையத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் வட்ட சட்டப் பணிகள் குழுவக்கீல் வைத்தீஸ்வரன், ஆனந்தி ,சேதுபதி, அருண்பாபு ஆகியோர் பெண்களுக்கான அடிப்படை சட்டங்கள் குறித்தும், இலவச சட்ட உதவிகள் பெறுவது குறித்து பேசினர்.
இதில் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர் கவுரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பண்ருட்டி வட்டப் சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் தியாகப்பிரியன் தொகுத்து வழங்கினார்.