ADDED : நவ 06, 2024 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி ; திட்டக்குடி அடுத்த சிறுமங்கலம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்த, அதே பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், அம்மா விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.
அதில், கபடி, வாலிபால் மைதானம் அமைக்கப்பட்டிருந்தன. நாளடைவில் பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டியதால் இளைஞர்கள், மாணவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறுமங்கலத்தில் பாழாகி வரும் அம்மா விளையாட்டு மைதானத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.