/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடப்போம் நலம்பெறுவோம் நடைப்பயணம் நிகழ்ச்சி
/
நடப்போம் நலம்பெறுவோம் நடைப்பயணம் நிகழ்ச்சி
ADDED : ஜன 08, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் நடைப்பயணம் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் சில்வர் பீச்சில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர் நல அலுவலர் எழில்மதனா தலைமை தாங்கினார். தொற்றுநோய் மாவட்ட திட்ட அலுவலர் லாவண்யா முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நடைப்பயணத்தை துவக்கி வைத்தார். பயணத்தில், வட்டார மருத்துவ அலுவலர்கள் அமிர்தாதேவி, அருண், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன், நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியம், கண்காணிப்பாளர் செங்கேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.